Tuesday, 1 May 2012

மன்னர் லகுடபாண்டி வருகிறார்....பராக்..பராக்...பராக்!

லகுடபாண்டி: அமைச்சரே.... யார் இவர்கள் கூட்டம் கூட்டமாய் லகுட பாண்டியின் அமைச்சரவைக்குள்...?

அமைச்சர் சுனா பானா: மன்னா அவர்கள்தான் மக்கள்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆரம்பத்திலேயே இப்படியா...?

ல.பா.:  சரி அமைச்சரே அடுத்து முறைப்படி நான் உங்களிடம் மாதம் மும்மாரி பொழிந்ததா என்றுதானே கேட்கவேண்டும்....ஹி ஹி ஹி... அது எல்லாம் வேண்டாமய்யா...நாம் பேசத்தான் நாட்டில் நிறைய நடக்கிறதே..... தமிழ் மக்களை கொன்றழித்த பின் ஆரம்பிக்கப்பட்ட டெஸ்ஸ்ஸ்ஸ்ஸோஓ......, ரஞ்சிதாவை ஆக்கிரமித்த பின் கிடைத்த ஆதினம் பதவி, அடிக்கடி டகால்டி முடிவெடுக்கும் ஜெயலலிதா அம்மையார், பொம்மை மனிதர் மன்னு மோகன்  சிங்கு....இப்படி நெறைய நிறைய நகைச்சுவைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றவாம் அது பற்றியெல்லாம் கொஞ்சம் கதைப்போமா...ஹி ஹி ஹி

.சு.பா: அருமை மன்னா....அதையே செய்வோம்...வாழ்க...மருதை ஆதீனம்...! வாழ்க டெசோ.....இந்த முதல் நாளில் உங்கள் பொன்னான ஒரு வார்த்தையைக் கூறி தொடங்கலாமே....

ல.கு: ஆகட்டுமய்யா சு.........னா.......பான....நான் பேஸ் புக்கில் உலாவிக் கொண்டிருந்த போது வாசித்து வயிறு வலிக்கச் சிரித்ததை இங்கே பகிர்கிறேன்.....

" கஞ்சிக்கு உழைச்சா மேதினம்.....
  ரஞ்சிக்கு உழைச்சா ஆதினம்....."

ம்ம்ம்ம்ம் ...ஹி.... ஹி.... ஹி..... தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்...!

நையாண்டி தர்பார் ஆரம்பிக்கட்டும்........!


- லகுடபாண்டி & கோ



2 comments:

  1. இந்த முதல் நாளில் உங்கள் பொன்னான ஒரு வார்த்தையைக் கூறி தொடங்கலாமே....

    அருமை மன்னா.

    ReplyDelete