Wednesday, 2 May 2012

டமிலின டலிவரும் டெஸ்ஸோவும்! தர்பார் - 1

அமைச்சர் சுனா.பனா: மன்னா....மன்...னா.... மன்னாஆஆஆ....

லகுடபாண்டி: என்னாய்யாஅ....ஏன் இப்டி கத்துற காலையில ஒரு 11 மணிக்கு மனுசன் தூங்க கூட முடியலையே என்ன அவசரம்...இப்போ...அந்தப்புரத்திலிருந்து அழைப்பா....???ம்ம்ம்ம்

சு.பா: மன்னா பெரும் ஆபத்து மன்னா பெரும் ஆபத்து.....நமக்கு?

ல.கு: என்ன ஆபத்து....? நாம்தான் எல்லோர்கிட்டயும் சரணாகதி ஆயிட்டோமே.. இன்னும் என்னய்யா ஆபத்து...? பொடி வைக்காமல் விசயதுக்கு வாரும்மய்யா...

சு.பா: மன்னா கலைஞர் கருணாநிதி இருக்கிறாரே...அவர் அசுர கதியில் நம்மை சிறுமைப்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்...? நகைச்சுவையாய் அதிரடி வேலையை எல்லாம் செஞ்சு நம்ம பொழப்புல மண்ணை அள்ளீ போடுறாரு மன்னா?

ல.கு: செந்தமிழ் எல்லாம் வேண்டாம்யா மந்திரி.. நீ ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வா... ? என்ன என்ன என்ன காமெடி செய்கிறார் எனதருமை டமிலின தலிவர்....? இனிமேல் அடைமொழியோடு அவரு பேர சொல்லு..இல்ல நாக்க வெட்டீருவேன்....

சு.பா: மன்னா ஈழத்தமிழர்களை எல்லாம் காக்க மறுபடியும் டெஸ்ஸோ வ ஆரம்பிச்சு இருக்காரு மன்னா?

ல.கு: என்னாஆஆஆஆ து தமிழர்களை காக்ககவா.........அதுவும் ஈழத்திலா ? என்னய்யா சொல்றா.. டெஸ்ஸோவ அவருதானய்யா சொல்லாம கொள்ளாம மூடினாரு....தலை சுத்துதுயா.. ஏய் யாரங்கே சீக்கிரம் ஒரு ஜோடா கொண்டு வாருங்களய்யா...

தலை தாறுமாய் சுத்துகிறது...

ஏய்யா சுனா பானா? இலங்கையில் தமிழ் ஆளுங்கள கொன்னு குவிச்சப்பா டமிலர் டலிவர்தானே சி.எம்மா இருந்தாரு....? அப்ப எல்லாம்
டெஸ்ஸோஓஒவ ஆரம்பிக்காம தனி ஈழம் வேணும்னு சொல்லாம....கம்முனு இருதுப்புட்டு இப்ப வந்து இந்த சீன் போட என்ன காரணம்?

முழு நீள நகைச்சுவை படத்தை எல்லாம் மிஞ்சி விட்டாரய்யா? பேஷ்.. பேஷ்...அப்பாலிக்கா மேல சொல்லு...

சு.பா: இதில் கி. வீரமணி எல்லாம் மெம்பர்ஸ் ஐயா....ஒரு தோதுக்கு தடாவுல கைதாகி ஜெயில்ல ரொம்ப நாளு இருந்த அந்தம்மா சுப்புலட்ச்சுமி ஜெகதீசனையும்...கூட சேத்து இருக்காங்க...

ல.பா: வீரமணியா ஈழத்தை கேட்டுகிட்டு வந்து இருக்காரு...? நான் செத்து விட்டேன் அமைச்சரே.. நான் செத்து விட்டேன்....இப்படியான நகைச்சுவைக் காட்சி உன் மரமண்டைக்கும் என் மரமண்டைக்கும் ஏன் இதுவரை தோணவில்லை...தோற்றுத்தானயா விட்டோம்...தோற்றுதான் விட்டோம்...!!!
ஒருங்கிணைந்த இலங்கையில்தான் தமிழர்களுக்கு தீர்வுன்னு அப்ப சொன்னாரய்யா நம்ம டலிவரு... மட மந்திரி... சரி கொஞ்சம் நீ எந்திரி...இப்டியே வந்து என் தலைய அமுக்கி விட்டுகிட்டே சொல்லு.... முடியலை......

ஒருங்கிணைந்த இலங்கைதான் தீர்வுன்னு சொல்ற காங்கிரஸ் கூட்டணிய விட்டாச்சும் வெளியில வந்தாரா இல்லையா?

சு.பா: இல்லை மன்னா...புத்திசாலி காங்கிரஸின் புத்திசாலி வாசன் நேற்றைய பேட்டியில் டமிலின டலைவரின் நிலைப்பாடு கூட்டணியை பாதிக்கவே பாதிக்காது என்று வேறு சொல்லியிருக்கிறார்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்

ல.பா: அட...டே...இது வேறயா......என்ன நிலைபாடோ...மக்களின் நிலைப்பாட்டை நினைத்தால் ரொம்ப கொடுமையாய் இருக்கிறது போ....
யோவ் மந்திரி ஜோடா கேட்டு முக்காமணி நேரமாச்சு..ஒரு பயபுள்ள மதிக்கிதா பாரு நம்மள...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏய் அப்பா யாரச்சும் ஒரு ஜோடா கொடுங்கையா....

சு.பா: நகைச்சுவை காட்சிகள் உச்ச பட்சத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன மன்னா.. நீங்களும் இருக்கீண்க்களே.. என்னத்த பண்ணி கிழிச்சீங்க....ஒரு ஸ்டண்ட் இருக்கா...ஒரு பரபரப்பு இருக்கா... பேசாம கோபாலபுரம் போயி பயிற்சி எடுத்த்துகிட்டு வாங்க மன்னா....

ல.கு: அப்படி எல்லாம் சொல்லாதேய்யா சுனா...பானா....அப்புறம் அழுதுடுவேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சு.பா: பிரபாகரன் இறந்துவிட்டாரா என்று ஒரு கேள்வியை டமிலின டலைவரிடம் கேட்டார்கள் மன்னா?

ல.கு.: என்ன சொன்னார் ...என்ன சொன்னார்....?

சு.பா: போராளிகளுக்கு அழிவில்லை; போராளிகள் எப்போதும் வாழ்வார்கள் என்று சொன்னார் மன்னா...ஹி ஹி..ஹி

ல.கு: அந்தக் கேள்விக்கு இது பதில் இல்லையே....? கேள்வியை ஒரு வேளை சரியா புரிஞ்சுக்கலையோ பெரியவர்...?

சு.பா: மன்னா அவரு புரிஞ்சுகிட்டாரு மன்னா, பதில் நமக்கு புரிஞ்சுட்டா அவருக்கு பிரச்சினையில்ல...அதுதான்.........ஹி ஹி ஹி

ல.கு: சபாஷ்...சபாஷ்..பலே..பலே....அவரை விட நீ கிராதகனய்யா....ஆக மொத்ததில்....விடுதலை கேட்டுப் போராடிய மக்களான விடுதலைப் புலிகளைப் பிடிக்காத ஜெயலலிதா ஈழத்தாயாகி...எப்படி இப்போது தனி ஈழத்துக்கு போராடு போராடு என்று போரடுகிறாரோ....

அப்படியே டமிலினர டலைவரும் அம்புட்டு பேரையும் கொன்னு குவிக்கிற வரைக்கும் கம்ம்னு இருந்துப்புட்டு....அவுங்க புள்ளைக் குட்டிய சண்டய கலைக்க ஈழம்தான் தீர்வுன்னு முடிவு பன்னிட்டாரு போல....

இது தெரிஞ்சு இருந்தா அவரோட ரெண்டு புள்ளைகளுக்கும் ஈழப் போர் நடந்தப்பவே சண்டைய மூட்டி விட்டு இருகலாமய்யா... மட மந்திரி........!!! நம்ம உளவுப் படைக்கு அந்த வேலையாச்சும் கொடுத்து இருக்கலாம்...தண்டச் சம்பளமாச்சும் மிஞ்சி இருக்கும்...

அம்புட்டும் வெளங்கிருச்சுய்யா....முந்திரி...அட ச்ச்சே... அந்திரி...அட...நீ எந்திரி.ய்யா கிறு கிறுன்னு வருது....நான் போய் செத்த படுக்கிறேன்....

இந்த பேஸ்புக்க்ல நடக்குற சம்சாரத்த எல்லாம் சாரி  சாரி...சமாச்சாரத்த எல்லாம் சேத்து வைய்யி....நாளைக்கு தர்பார்ல கிழிக்கலாம்....

டேய்....யா.....யா....யாரங்கே.....என்னைய கைத்தாங்கலா அந்தப்புரத்த்துக்கு.. டேக்குங்கடா....

மந்திரி.. நீ கெட் அவுட்டு...டுமாரோ சீயிங்கு.....


கரு: 

டெஸ்ஸோ என்பது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஈழத்தை ஆதரிக்கும் வகையில் கலைஞர் திரு. கருணாநிதியால் துவங்கப்பட்ட அமைப்பு. அதில் தமிழக்த்தின் பல கட்சிகள் அங்கமாயிருந்தன. பின்னாளில் திரு. கலைஞர் ஐயா அவர்களாலேயே....பல ஓட்டைக்காரணங்களுக்காக அந்த அமைப்பு இழுத்து மூடப்பட்டு விட்டது.

2008 - 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த போரில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அப்போதைய முதல்வராய் இருந்த கலைஞர் அவர்கள், தமிழர்கள் கொல்வதை நிறுத்த வலுவான எந்த ஒரு போரட்டத்தையும் முன்னெடுக்காததோடு இந்த ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பான டெஸ்ஸோவையும் ஆரம்பிக்கவோ, தமிழர் அமைப்புக்களை ஒன்றிணைக்கவோ முயலாமல் காங்கிரசோடு கை கோர்த்து கடந்த சட்டமன்ற தேர்தல் வரை நடந்து வந்தார்.

ஈழத்தமிழர்களை எல்லாம் கொன்றழித்து மிச்சமிருப்பவர்களை கொட்டடிக்குள் ராஜபக்சே அடிமைகளாக அடைத்து வைத்திருக்கிறான் இப்படியான இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கச் சொல்லுவோம் என்று சொல்லும் காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டு தமிழ் ஈழம் என்ற முழக்கத்தை கையில் எடுத்திருக்கும்....திரு. கருணாநிதியின்...நோக்கம் என்னவாயிருக்கும் என்பதை வாசகர்களாகிய உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறோம்.


- லகுடபாண்டி & கோ



No comments:

Post a Comment